Sri Maha

Rudhra Bavaneeswarar Temple and Trust

ஆலயத்தின் வரலாறு மற்றும் சிறப்புகள்

சுகமுனிவர் என்ற ரிஷி இந்த ஊர் வழியாக சென்றபோது எதிர்பாராமல் அவரை ஒரு நாகம் தீண்டிவே அவர் இச்சிவாலயத்திற்கு வந்து தவம் புரிந்து அக்கொடியவிஷம் முறிக்கப்பெற்று சிவனருள் பெற்ற திருத்தலம். இன்றும் மூலவ திருமூர்த்திகளின் மீது சர்பங்கள் ஸ்பரிசத்தை காணமுடிகிறது.

மூன்றாம் பார்த்திவேந்திரவர்மன் என்ற மன்னனால் நிலம் வழங்கப்பட்டு, அதில் ஈசனுக்கு நந்தவனம் அமைத்து வழிபாடு செய்து சிவனருளால் அனைத்து நலன்களையும் பெற்ற திருத்தலம் என்ற தகவல் இவ்வாலயத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.

மேலும், இவ்விரு கல்வெட்டுகளில் தர்மத்தை காப்பவர்களின் பாதத்தை தன் தலைமேல் வைத்து போற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

temple image 5
artboard 1

கைலாசநாதர் சன்னதி புனரமைப்புத் திருப்பணி

ஆலயத்தின் வடகிழக்குப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் ஆலயம் சிதிலமடைந்து பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாத நிலையில் உள்ளதால் அதனை புனரமைப்பு செய்து கற்கோயில் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அதீத சக்திவாய்ந்த இந்த தொன்மையான சிவாலயத்தின் புனரமைப்பு திருப்பணியில் நீங்களும் மன்னன் பார்த்திவேந்திரவர்மன் போல நிதி மற்றும் பொருள் அளித்து சிவ கைங்கர்யம் செய்து சிவனருளால் அனைத்து நலன்களுடன், பேர்புகழ்பெற்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நோயின்றி நீடுடி வாழ்க!!
சிவார்ப்பணம்!!!